Monday, May 7, 2012

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா!

தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா!



பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி

மிதித்துவிடு பாப்பா!-அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!



துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!



சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்

சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!

தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ

திடங்கொண்டு போராடு பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி

கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்.



உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-
தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிரமுடையநெஞ்சு வேணும்;-இது வாழும் முறைமையடி பாப்பா!

No comments:

Post a Comment