//நாள்தோறும் நாள் தோறும் நான் எல்லாவிதத்திலும் முன்னேறி வருகிறேன் என்ற வாக்கியத்தை திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தால் பதின்மூன்று வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளி ஒருவர் பூரண குணமாகி எழுந்து நடந்தார்//
ஒருவர் தனது ஆழ் மனதுக்கு இடும் கட்டளைகளே குணங்களாகவும் விருப்பங்களாகவும் எதிர்பார்ப்புக்களாகவும் உருவெடுக்கின்றன.
சாதரண உணவுப்பழக்கவழக்கங்களிலேயே
இந்த உணவு எனக்கு ஒத்து வராது என்பது வேறு அது ஒவ்வாமை.ஆனால் இந்த உணவு எனக்கு பிடிக்காது என்பது 95 வீதம் நாமே உருவாக்கி பின்பற்றும் ஒரு கற்பனை.இதே போன்று நமக்கு வரும் பிரச்சனைகளில் பாதிக்கு மேல் நாம் கற்பனை செய்து கொள்பவையே.
என்னை ஒருவர் நோகடிக்கிறார் என்பது தவறான குற்றச்சாட்டு.
என் அனுமதி இன்றி என்னை யாரும் நோகடிக்க முடியாது என்பது காந்தி சொன்னது.
நம்மை நோகடிக்கும் சந்தர்ப்பத்தை பல வழிககளில் நாமேதான் பிறருக்கு உருவாக்கிக்கொடுக்கிறோம்.அந்த உரிமையை நம்மிடம் இருந்துதான் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது உண்மை.அடுத்தவரை நோகடிக்கும் அற்ப குணம் படைத்தவர்களின் தரத்திற்கு நாமும் பயணிக்கும் போதுதான் அவர்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் செவிமடுத்து மதிப்பளிக்கும் வேளையில்தான் நாம் வார்த்தைகளாலுல் செய்கைகளாலும் நோகடிக்கப்படுவோம்.
இதையும் மீறி யார் யாருக்கு என்னென்ன இடம் யாருக்கு இவ்வளவு எல்லை யார் உறவை நெருக்கப்படுத்துவது யாருக்கு எவ்வளவு இடைவெளியை நம்மிலிருந்து ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பகுத்தறிந்து
நல்லனவற்றில் அதிகம் கவனம் செலுத்தி முற்போக்குடன் சிந்தித்து அடுத்தவர் வாழ்வில் அநாவசியமாக உரிமையெடுத்து அவர்கள் தனிப்பட்ட விடயங்களை ஆராய்வதும் அறிந்து கொள்ள முற்படுவதிலும் தேவையற்ற வாக்குவாதங்களிலும் சிக்காமல் நடப்போமானால் நம்மை யாரும் நோகடிக்க முடியாது
நோகடிப்பவரைப்பற்றியோ புண்படும் அந்த வார்த்தைகளை சேர்த்து வைத்து
நம்மில் மீட்பதற்கோ நம் மனங்களில் ஒரு இடத்தையோ நேரத்தையோ ஏற்படுத்திக்கொள்வது நாமேதான்
நல்ல சொல் சிந்தனைகள் செயல்கள் நல்ல வார்த்தைகள் புறம் சொல்லாமை போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நம்மில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நாமே நம்மை மகிழ்வாக வைத்திருக்க முடியும்.
யார் வார்த்தைகளையும் கண்டு கொள்வதும் அதுபற்றியே நமக்கு மதிப்பளிப்பவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பதுவும் நமது வேலையாக இருக்காது.
அடுத்தவர்களைப்பற்றி தவறாக சிந்திப்பதும் பேசுவதும் நம் மனதை நாமே அழுக்கடையச்செய்வதாகும்.
ஆகவே இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை விட இனிமேல் நீங்கள் உங்கள் மனதையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க விரும்பினால் அடுத்தவர்களில் உள்ல நல்ல குணங்கள் செயல்களை மட்டுமே பேசுங்கள் .அவர்கள் தீய குணங்களை உங்களில் வரவிடாமல் விரட்டுங்கள்..
நீங்கள் பேசுவதை எல்லாம் உங்களுடடைய உடலிள்ள செல்கள் பதிந்து வைத்திருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் நல்லதையே பேசும்போது உங்கள் சிந்தனைகள் மாற்றம் பெறும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தெளிந்த மனம் உருவாகும்.உண்ணும் உணவை விட பேசும் பேச்சில் அதிக கவனம் வையுங்கள்.
உதாரணமாக நீங்கள் பணக்கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு நெருக்கமான ஒருவர் ஒரு பொருளோ வீடோ வாங்குகிறார் .அது உங்களுக்கு உறுத்தலாக இருக்கும் .எதுவரை
நீங்கள் அப்படியா நல்ல விடயம். யாராக இருந்தாலும் நல்ல நிலையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்துவது நல்லதுதானே என்ற வார்த்தைகளை வாய்விட்டு உச்சரிக்கும் வரை.
ஆம் உங்கள் கஷ்டங்களை போக்க பாடுபட வேண்டியது நீங்கள்தான் அதைவிடுத்து அடுத்தவர் கஷ்டப்பட்டு முன்னேறும்போது அங்கலாய்ப்பது உங்கள் மனத்தூய்மையை நீங்களே கெடுத்துக்கொள்வதாகும்.
நாம் அடிக்கடி நம்மைப்பற்றி சொல்லும் பொயான வார்த்தைகள் உண்மையாவதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.அதனால் வாழ்வை மாற்ற வார்த்தைகளை மாற்றுங்கள்.
-பூமணிமகள்-
No comments:
Post a Comment