எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை
Monday, May 7, 2012
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
தன் வினை தன்னைச் சுடும்
இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதே
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
காகம் திட்டி மாடு சாகாது
வெளுத்ததெல்லாம் பாலல்ல
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை
வட்டி ஆசை முதலுக்கு கேடு
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்
காலம் பொன் போன்றது
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்
வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
வாழ்வும் தாழ்வும் சில காலம்
விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை
வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா
முகத்துக்கு முகம் கண்ணாடி
மொழி தப்பினவன் வழி தப்பினவன்
தவளை தன் வாயாற் கெடும்
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை
நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்
பெருமையும் சிறுமையும் வாயால் வரும்
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
குனிந்தால் சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்
உலோபிக்கு இரட்டை செலவு
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
ஆழமறியாமல் காலை இடாதே
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்
எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால்
என்ன தருவாய் ?
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்
கெடுவான் கேடு நினைப்பான்
கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே
சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment