எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை
Monday, May 7, 2012
வாழ்வு
வாழ்வு என்பது ஒரு பூங்கொத்து
பணம் கல்வி
அன்பு பண்பு
சுற்றம் சூழல்
ஆடை அணிகலன்
உணவு உறைவிடம்
நன்மை தீமை
என்பன ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூக்கள்
அவரவர் தங்களுக்கு ஏற்ற பூங்கொத்தை
தயார் செய்கிறார்கள்.
சிலர் சில பூக்களை
சேர்க்க மறக்கிறார்கள்
சிலர் மறுக்கிறார்கள்
எல்லா பூக்களையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை
ஆனால் ஒரு பூவை மட்டுமே வைத்துக்கொண்டு
பூங்கொத்து என்று சொன்னால் அர்த்தமில்லை
-சுறேஜினி பாலகுமாரன்-
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment